
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடந்து முடிந்த 2026 ஆம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டார். நடந்து முடிந்த தேர்தலில் புதிதாக வாக்கு செலுத்தியவர்கள் எண்ணிக்கையும் வாக்கு சதவீதமும் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை நடந்த தமிழக தேர்தல்களில் அதிக வாக்கு சதவீதம் பெற்ற தேர்தலாக விஜய்யின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட்ட 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இந்த சிறப்பினைப் பெற்றுள்ளது.
இளம் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் அதிகம் விரும்பும் தலைவராக விஜய் இந்த தேர்தலில் தன்னை முன்னிறுத்தி உள்ளார். ஊழலுக்கு எதிரான தனது சாட்டையை தேர்தல் பிரச்சாரத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் திமுகவுக்கு எதிராக தன்னை மாற்று அரசியலின் தூய சக்தியாக வெளிப்படுத்தி வந்தார் விஜய்.
தேர்தல் முடிவுக்கு பின் முழு நேர அரசியலில் ஈடுபட விஜய் தன்னை தயார் படுத்தி வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூர் சம்பவம் விஜயை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் முதல் தேர்தலுக்குப் பிறகு கட்சியை கலைத்து விட்டு திராவிட கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இந்த வரிசையில் விஜய் இணைந்திடாமல் இருக்க, வாக்கு எண்ணிக்கை பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திட தமிழ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திராவிடத்திற்கு மாற்றாக தமிழ் தேசியத்தை முன் நின்று வழிநடத்தும் தலைவராக விஜய் உருவாகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் மீது மத அடையாளம் மாற்றுக் கட்சியினரால் முன்னிறுத்தப்பட்டது. தன் மீதான மத அடையாளத்தை உடைப்பதற்காக, அனைத்து மதத்தினருக்கும் நான் சமமானவன் என்பதை நிரூபிக்க தமிழக வெற்றி கழக தலைவர்-விஜய் தமிழ் கடவுள் முருகனை திருச்செந்தூர் சென்று வழிபட்டுள்ளார்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை தமிழ்நாடு அரசியால் சந்திக்கும். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்களை தமிழக வெற்றி கழகத்துடன் இணைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் ஈடுபட்டு வருகிறார்கள். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் திமுக உடனான கூட்டணி உடன்படிக்கை கடைசி நேர மன வருத்தத்தை ஏற்படுத்தியது. மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற தங்களுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.
திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் தங்களை வளர விடாமல் செய்வதற்கு, தங்களது கட்சி உறுப்பினர்கள் திமுக நிலைப்பாட்டை முன்னிறுத்துவது கட்சியின் வளர்ச்சியை எதிர்காலத்தில் அழித்து விடும் என்பதை இத்தேர்தல் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவனிற்கு உணர்த்தி உள்ளது.
இதை உணர்ந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், மக்கள் மத்தியில் தமிழ் தேசிய விழிப்புணர்வு மிகப்பெரிய அளவில் Social Media மூலம் பரவி வருவதை தனக்கு சாதகமாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளார். அதன் தொடக்கமாக விஜயின் அரசியல் பயணத்திற்கு தமிழர் என்ற அடையாளத்துடன் திராவிடத்திற்கு மாற்றாக தமிழ் தேசியத்திற்கு தலைமை ஏற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்வதற்கு தமிழ் கடவுள் முருகனின் வீட்டில் வந்து வழிபாடு செய்துள்ளார்.


