கலைஞரால் முரட்டு பக்தன் என்ற அடைமொழியுடன் தூத்துக்குடியில் திமுகவின் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னாள் அமைச்சர் பெரியசாமி அவர்களது மகள் கீதா ஜீவன் தொகுதி மக்களால் அதிக விரும்பப்பட்டவர். அரசின் வளர்ச்சி திட்டங்களை தூத்துக்குடி மக்களுக்கு கொண்டு சேர்த்து மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சர்களில் முதன்மையானவர் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் ஆவார்.தமிழ்நாட்டு அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் திட்டங்கள், பொருளாதாரம் முன்னேற்றம், பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து உருவாக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்கும் என்பதில் அனைவரும் நம்பி வந்தார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களில் எந்த ஒரு குற்ற வழக்கிலும் தனது பெயர் அடிபடாமல் பார்த்துக்கொண்டு மக்கள் மத்தியில் நல்ல பெயருடன் மீண்டும் வெற்றி பெறுவார் என்ற பெயரினை பெற்றிருந்த தூத்துக்குடி தொகுதியின் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்.
தொகுதியில் தேர்தல் செலவினத்திற்காக ஒதுக்கிய நிதியினை கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் தங்களுக்குள் பங்கிட்டு கொண்டதால் தேர்தல் சமயத்தில் தூத்துக்குடி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி உறுப்பினர்கள் மக்களிடையே தேர்தல் பணியாற்றாமல் ஒதுங்கி கொண்டார்கள்.
எளிதில் வெற்றி பெற்று விடலாம் எதிர்த்து வலுவான கட்சி போட்டியிடவில்லை. அரசின் செயல் திட்டங்கள் மூலம் மக்கள் மீண்டும் திமுக வை ஆட்சியில் அமர வைத்து விடுவார்கள், என எண்ணிய நிர்வாகிகளின் மோசமான எண்ணத்தின் விளைவால். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை தேர்தலுக்கு செலவழிக்காமல் தங்களுக்குள் பங்கிட்டு கொண்டார்கள்.
தொகுதியில் எந்த சம்பந்தமும் இல்லாத ஒருவர் சினிமாவில் காமெடியில் துணை நடிகராக வரக்கூடியவர் தேர்தல் பிரச்சார முறையில் சமூக ஊடகங்களில் கேலி கிண்டலுக்கு ஆளானவர் இவர் எங்கே வெற்றி பெறப் போகிறார் என சிரித்துக் கொண்டவர்கள், இன்று தேர்தல் முடிவுக்கு பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் கையில் இருக்கும் பணத்தினை வைத்து தலைமைக்கு எப்படி பதில் சொல்ல என்று தெரியாமல் உள்ளார்கள்.


