
2026 நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக விஜயின், தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட்டு முதன்மை கட்சியாக தேர்தலில் வெற்றியை பெற்றுள்ளது..தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? என்ற கேள்விக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒருவரின் பெயரை தேர்ந்தெடுத்துள்ளது.
50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவர் தமிழ்நாட்டின் அரசியலுக்கு வருவார் என்பது தமிழ்நாட்டின் இளம் வாக்காளரின் விருப்பமாக இருந்து வந்தது. இதனை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்பது உண்மை.
தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்த ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் பெண்களுக்கு அதிகப்படியான நலத்திட்டங்களை முன்னெடுத்து செய்து வந்தது. மாதம் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் சீட்டு, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மூலம் தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம் என திராவிட முன்னேற்ற கழகம் எண்ணி வந்தது.
தமிழ்நாடு மக்கள் நீண்ட காலமாக திராவிட கட்சிகளை மாற்றி மாற்றி அரியணையில் அமர்த்தி வந்தார்கள்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டின் செயல்படுத்தும் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் 70 சதவீதத்துக்கு மேல் வடமாநிலத்தை சார்ந்தவர்களாக உள்ளார்கள். தமிழ்நாடு பொருளாதாரத்தில் சிறந்து விளங்கினாலும் அதன் பலன் தமிழர்களுக்கு கிடைக்காமல் இருந்து வந்தது.
தமிழர்களை ஓட்டுக்காகவும், ஜாதி அரசியலுக்கு, மது விற்பனைக்கும் பயன்படுத்தி வந்த திராவிட கட்சிகள் தங்களது ஆட்சியில் ஏற்பட்ட கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் சரியான பாதையில் செல்ல தவறியது. இன்று திராவிட கட்சிக்கு மாற்றான ஒரு அரசியலை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசும் ஏற்கனவே தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளும் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்று தர அலட்சியம் காட்டினால் இந்த அரசியல் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.


