
AI Image’s
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் வெற்றியினை பெறாததால் கூட்டணி ஆட்சியை உருவாக்க. தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் 108 இடங்களை பெற்ற தமிழக வெற்றி கழகம் கூட்டணி கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு அடிப்படையில் கட்சிகளை இணைத்து முதலமைச்சர் பதவியை ஏற்கப் போகிறார் விஜய்.
திமுக உடனான கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு முன்பே தங்களது தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தியில் இருந்து வந்தார்கள். தேர்தல் முடிவு திமுகவை எதிர்க்கட்சி இடத்தில் அமர வைத்துள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திமுகவின் கூட்டணி கட்சிகள் விஜயின் அழைப்பிற்காக காத்திருக்கிறார்கள்.
திமுக தனக்கு கிடைத்த இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனில் மீண்டும் தேர்தலை சந்திக்காமல் இருக்க வேண்டும். மீண்டும் தேர்தல் நடந்தால் திமுகவின் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும். அப்படி நடந்தால் 234 தொகுதியில் 200க்கும் மேற்பட்ட தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விடும் இதனை தவிர்ப்பதற்கு திமுக தனது கூட்டணி கட்சிகளை இழப்பதால் எதிர்க்கட்சி அந்தஸ்து 5 ஆண்டுக்கு நிலைத்திருக்கும்.
அடுத்து வரும் தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு இடையிலான போட்டி தமிழ் தேசியம் VS திராவிடம் என புதிய பாதையில் தமிழ்நாட்டு அரசியல் பயணிக்கும். இந்த அரசியல் மாற்றத்தில் திராவிட கட்சியில் இரண்டில் ஒன்று தனது செல்வாக்கை இழக்க வேண்டி வரும். இதை அரசியல் முதிர்ச்சி அடைந்த திராவிட முன்னேற்றக் கழகம் நன்கு உணர்ந்து இருக்கிறது இதனால் தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் அமர திமுக தான் கூட்டணி கட்சிகளை இழப்பதற்கு தயாராக இருக்கிறது.
இந்த தேர்தல் மாற்றத்தில் திமுக தனது அரசியல் இருப்பிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்தை இழக்கிறது, இந்த முறை எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் இழந்து மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. இது அந்தக் கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் எதிர்காலத்தை மிகப்பெரிய அழுத்தத்திற்கு தள்ளிவிடும்.
வரும் நாட்களில் அரசியலில் அதிமுகவின் செல்வாக்கு குறைவது அவரது கட்சி உறுப்பினர்கள் மாற்றுக் கட்சிக்கு செல்லும் நிலை ஏற்பட்டால் மீண்டும் அதிமுகவால் தமிழ்நாட்டை ஆளக்கூடிய நிலையை உருவாக்க முடியாது. சீமானின் நாம் தமிழர் கட்சியை போன்று எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக மாறிவிடும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.


