
தமிழ் சினிமா வரலாற்றில் எம்ஜிஆர், ரஜினிக்கு பிறகு விஜய்க்கு அதிக ரசிகர் கூட்டமும் துடிப்பான இளைஞர்களையும் கொண்ட முன்னணி நடிகராக விஜய் திகழ்ந்து வருகிறார். இன்றும் தன்னை இளமையாக வைத்திருக்கும் விஜய் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகள் மேல் பயணம் செய்யும் தகுதியுடன் உள்ளார்.
தமிழக அரசியலில் ஜாம்பவானாக இருந்த கலைஞர் கருணாநிதியும் செல்வி ஜெயலலிதா அவர்களும் இறந்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பதற்காக நிலையான அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள போட்டியில் வெற்றி பெற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முதன்மை கலாமா கொண்டு வெற்றி பெற்று தங்களது இடத்தை நிலை நிறுத்திக் கொள்ள கடுமையாக போராடி வருகிறார்கள்.
நிலையான எதிர்க்கட்சி யார் என்பது இந்த தேர்தலில் முடிவாகிவிடும். இந்த தேர்தலை பயன்படுத்த சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி கடுமையாக தேர்தல் பிரச்சாரத்தை முன்னிறுத்த, அனைத்து தகுதியுடன் தேர்தல் களத்திற்கு தயாரான வேளையில், விஜய் புதிதாக தமிழக வெற்றி கழகம் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் களத்திற்குள் உள்ளே வந்து அரசியல் போட்டியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் நாலு முனை போட்டியாக தேர்தலை சந்தித்து முடித்துள்ள விஜய். இத்தேர்தலில் பெறப்போகும் வாக்கு சதவீதத்தை வைத்து தனது அரசியல் பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்வாரா, இல்லை மற்ற நடிகர்களை போன்று சினிமா புகழை அரசியலுக்கு பயன்படுத்திவிட்டு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனால் கட்சியை கலைத்து விடுவாரா என்பது மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.
விஜய் இந்த தேர்தலில் 7.5 சதவீத வாக்குகள் குறையாமல் பெறுவார் என்பது அவருக்கு வந்துள்ள கூட்டத்தை வைத்து கணித்துக் கொள்ள முடியும். இந்தத் தேர்தலுக்கு முன்பே திமுக மக்கள் மத்தியில் கொண்டு வந்த இலவச பேருந்து பயண சீட்டு, மக்களுக்கு 1000 ரூபாய் முன்பணம் இதனைக் கடந்து ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மக்கள் பெரிய அளவில் அதிருப்தி அடையவில்லை என்பதே உண்மை. இதை வைத்துதான் தேர்தலுக்கு முன்பு அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஸ்டாலின் தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கூறியது.
பத்திரிக்கையாளரை இதுவரை சந்திக்காத விஜய் தனது அரசியல் நிலைப்பாடு வெற்றியை வைத்தே தீர்மானிப்பார் என்பது உறுதியாகி உள்ளது. 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்க்கட்சி யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தலாகவே நடந்து முடிந்து இருக்கிறது. அரசியல் களத்தை மாற்ற போகும் மே 4 ஆம் தேதி விஜய் gift கொடுப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


