
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அஜித்குமார் வெள்ளை நிற கோட் சூட் அணிந்து வழக்கம்போல் முதல் ஆளாக தேர்தலில் வாக்களிக்க வந்திருந்தார். தேர்தலுக்கு முன்பு வரை அவர் தனது கார் ரேஸ் பந்தயத்தில் கவனம் செலுத்தி வந்தார். பெல்ஜியத்தில் நடந்த கார் ரேசில் அஜித் குமார் கார் ரேஸ் அணி இரண்டாவதாக வந்து இந்தியாவின் தேசிய கொடியினை கார் ரேஸ் அரங்கில் பறக்க விட்டு இந்தியாவிற்கு கௌரவத்தை தேடி தந்தார் அஜித்குமார்.
2010 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியின் போது நடிகர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாட்டு முதல்வருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த அஜித்குமார் நடிகர் சங்கம் சார்பாக தமிழ்நாட்டு முதல்வருக்கு பாராட்டு விழாவில் கலந்து கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதி மேடையில் இருக்கும் பொழுது அஜித்குமார் அரசியல் நிகழ்ச்சிக்கு நடிகர்கள் வர வைக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று கூறினார். நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக இவர் கூறிய கருத்துக்கு அஜித்குமார் திமுகவிற்கு எதிரானவராக சித்தரிக்கப்பட்டார். அஜித்குமாரின் இந்த கருத்து திமுகவிற்கு எதிராக பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக அஜித்குமார் கலைஞர் டிவிக்கு முதல் முறையாக பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார், அதில் அஜித் குமார் வெள்ளை நிற கோட் சூட் அணிந்து கலந்து கொண்டார்.
அஜித் குமார் திரைப்படங்களையும் பாடல்களையும் திமுகவின் ஆதரவற்ற டிவி ஒளிபரப்புவதை தவிர்த்தது, அஜித் குமார் கலைஞர் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, தான் எந்த அரசியல் கட்சியிலும் சாராதவன் என்றும் தன்னுடைய கருத்துகள் திமுகவுக்கு எதிரானது இல்லை என்பதையும் தெளிவாக தெரிவித்த பிறகு இந்த பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டு திரைத்துறையில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக அஜித் விஜய் இந்த கூட்டணி மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் ரசிகர்களை உருவாக்கியது. இவர்களது திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் திருவிழாவாக ரசிகர்கள் மாற்றுவார்கள்.
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்து தேர்தலில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை முன்வைத்து 2026 அரசியலில் தமிழ்நாட்டின் முதல்வர் வேட்பாளராக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். எதிர்பாராத விதமாக விஜயின் மனைவி சங்கீதா சென்னை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து பெற விண்ணப்பித்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது, அந்த நேரம் விஜய் திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விஜய் சங்கீதா விவாகரத்துக்கு சங்கீதா கூறிய ஒரு நடிகை திரிஷா தான் என்பது இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி ஆக அமைந்து விட்டது.
நடிகர் அஜித் குமார் மனைவி ஷாலினி நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுடன் நல்ல நட்பில் இருக்கக்கூடியவர் விஜய் சங்கீதா விவாகரத்தால் அஜித் விஜய்க்கு எதிரான மனநிலைக்கு மாறி உள்ளார். அஜித் குமார் வெள்ளை கோட் சூட் அணிந்து வந்தது தான் திமுகவிற்கு வாக்களித்ததை மறைமுகமாக வெளிக்காட்டத்தான் என்பது 2010 ஆம் ஆண்டு முதல்வருக்கு நடிகர் சங்க நடத்திய பாராட்டு விழாவில் அஜித் பேசிய பிறகு கலைஞர் டிவிக்கு அவர் கொடுத்த பேட்டியில் வெள்ளை நிற கோட் சூட் அணிந்து வந்ததை தான் திமுக விற்கு ஆதரவாக இருப்பதை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அஜித் குமார் தனது கார் ரேஸ் பந்தயத்தை பிரபலப்படுத்த அம்பானியின் தயாரிப்பான கூல்ட்ரிங்ஸ் விளம்பரத்தில் நடித்ததின் மூலம் அஜித்குமார் ட்ரோல் செய்யப்பட்டு வந்தார். இதற்கு அடுத்தபடியாக உதயநிதி தயாரிப்பில் தனது அடுத்த படத்தினை வெளியிடுவதற்காக இது ஒரு கூட்டணியாகவும் அமையும் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.


