
நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டின் அரசியலில் புதிய கூட்டணி உருவாவதற்கு அடித்தளமாக அமைகிறது. திராவிடத்திற்கு மாற்றாக தமிழ் தேசிய அரசியலுக்கு புதிய தலைவராக சீமானுக்கு மாற்றாக விஜயை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.
சீமானின் அரசியல், தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகளை எதிர்ப்பது தனி தமிழ் தேசியம் என்ற கூட்டணி இல்லா நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கும் மத்தியில் ஆளும் கட்சிகளான பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் தங்களது அரசியல் நிலைப்பாட்டை திராவிட கட்சியை தவிர்த்து மாற்று அரசியலுக்கு சரியான தலைவர் இல்லாமல் தமிழ்நாட்டில் திணறி வருகிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சீமான் உடன் கூட்டணி வைக்க மத்தியில் ஆளும் பிஜேபி கட்சி எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. மாற்று அரசியலை எதிர்பார்க்கும் இளைஞர்கள் சீமான்,அண்ணாமலை, விஜய் இவர்களை முன்னிலைப்படுத்தி தங்களது வாக்குகளை திராவிட கட்சியில் இருந்து பிரிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பிஜேபி கட்சியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியதில் தமிழிசை அவர்களுக்குப் பிறகு அண்ணாமலைக்கு முக்கிய பங்கு உண்டு. தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் பிஜேபியில் அண்ணாமலைக்கு சரியான முக்கியத்துவம் இல்லாமல் உள்ளது. இது நிகழ்வுகள் எல்லாம் தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் மிகப்பெரிய அளவில் திராவிட கட்சிக்கு மாற்றாக உருவாகும் என்பதை காட்டுகிறது.
தமிழ் தேசியத் தலைவராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை முன்னிலைப்படுத்தி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சியை இணைத்து அடுத்து வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் ஊழல் இல்லா அரசாங்கத்தை அமைத்திட திராவிட கட்சிக்கு மாற்றாக தமிழ் தேசிய தலைவராக விஜயின் தமிழக வெற்றி கழகம் உருவாகும் என்பதை அடுத்து வரும் தேர்தல் மிக முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.