
கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகள் பாடப்புத்தகங்களை தவிர்த்து பெற்றோர்களுடன் அதிக நேரத்தை செலவழிக்க பெற்றோர்கள் தங்களுடைய அனுபவ அறிவை குழந்தைகளுடன் பரிமாறிக் கொள்ள பேசும் பழக்கத்தை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் அதிக வெயில் காலம் இயற்கையாகவே குழந்தைகள் வெளியே செல்ல விரும்ப மாட்டார்கள் இந்த காலத்தில் பெற்றோர் குழந்தைகளுடன் தங்களது பழக்க வழக்கங்களை வெளிப்படுத்த வீடு மற்றும் சுற்றுலா தளங்கள் சிறந்த தேர்வாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் இது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்த இயற்கையான காலநிலை விடுமுறையாக கோடை காலத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோடை விடுமுறையில் குழந்தைகள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வெளியே சென்று பயிற்சி எடுக்கும் வழக்கம் தற்பொழுது அதிகமாக உள்ளது, இது வியாபார ரீதியாக இன்றைய குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து மொபைலில் அதிக நேரத்தை செலவிடும் வணிக பொருளாக மாற்றுகிறார்கள் இன்றைய தலைமுறையினர்.
கோடைகால பயிற்சி வகுப்புகள் முடித்து வரும் குழந்தைகள் பெற்றோர்கள் தனக்கு கொடுத்த வேலையை முடித்து விட்டதாக கருதி இணையதளங்களில் அதிக நேரங்களை செலவிடுகிறார்கள் இது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான பேசும் சுதந்திரத்தை பெற்றோர்களாலே மறக்க அடிக்கும் செயலாக மாறி வருகிறது.
குழந்தைகள் தனது வயது உடைய பள்ளி நண்பர்களுடன் பழகி இருப்பார்கள் அவர்களை தவிர்த்து வயதில் பெரியவர்கள் ஆசிரியருடன் பழக வாய்ப்பு பள்ளியில் கிடைத்திருக்கும். இவர்களை தவிர்த்து பெரியவர்களுடன் மரியாதையாக பழகுவதற்கு பெற்றோர்களை விட சிறந்த ஆசிரியர்கள் யாரும் இல்லை. அவர்களுக்கு நல்லது அனைத்தையும் பெற்றோர்களால் மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும், பெற்றோருடன் ஒரு குழந்தை எப்படி பேசுகிறது என்பதை வைத்து மற்ற மனிதர்களுடன் அந்த குழந்தை நடத்தை வெளிப்படும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வார்த்தைகளில் தனக்கான அன்பை வெளிப்படுத்தும் பொழுது குழந்தைகள் வெளி நபரிடம் அன்பை எதிர்பார்க்க மாட்டார்கள். இந்தக் கோடை காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருக்கும் பொழுது அவர்களுடன் விளையாடும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள் அது அவர்களை உங்களிடம் எளிதாக இணைத்துக் கொள்ளும். குழந்தைகளிடம் விளையாட நேரம் ஒதுக்காத தாய் குடும்ப உறவிலிருந்து விலகி இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறாள்.தனக்கான தேவைகள் என்ன என்பதை பெற்றோர் முதலில் புரிந்து அதனை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். தனக்கான தேவைகளை முடித்த பிறகு குழந்தைகளுடன் விளையாடும் நேரத்தை அதிகப்படுத்தும் பெற்றோர்களின் குழந்தைகள் வெளித்தோற்றத்தில் மகிழ்ச்சியாகவும் தனது எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய சூழ்நிலைகள் அவர்களுக்கு கிடைக்கும் என்பதை குழந்தை பருவத்திலேயே அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

ஏழை பணக்காரர் என்று பாகுபாடு தாய் தனது குழந்தையிடம் காட்டுவதில்லை, ஆனா அவர்கள் தங்கள் குழந்தையுடன் விளையாடும் நேரத்தை மட்டும் செலவழிக்க தயங்குகிறார்கள். சிறுவயதில் திருமணம் முடியும் பெற்றோர்கள் சமுதாயத்தில் குழந்தையின் பங்கு என்ன என்பதை அறியாத மனிதர்களாக உள்ளார்கள். எதிர்காலத்தை குழந்தை எப்படி எதிர்கொள்ளும் என்பதை அவர்கள் பெரும் நம்பிக்கையை வைத்து தன்னம்பிக்கையுடன் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கு தாய் குழந்தையுடன் செலவழிக்கும் நேரம் வைத்து மதிப்பிடப்படும். அது அவர்களின் மனதை அமைதிப்படுத்தி சிறந்த சூழ்நிலையில் குழந்தை இருப்பதை மகிழ்ச்சியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
