
இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் நோய்களில் முதன்மையானது தோள்களில் ஏற்படும் அரிப்பு மற்றும் வெயிலில் சென்றால் வந்தால் சூரிய வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு நோய்களால் பலவீனமாக உணர்வது. இதனால் ஏற்படும் அழுத்தம் மனதளவில் தங்களை பலவீனமானவர்களாக கோடை காலத்தில் மக்கள் உணர்கிறார்கள்.
இதிலிருந்து விடுபட நமது முன்னோர்கள் ஆரம்பத்தில் பயன்படுத்தி வந்த அத்தியாவசிய பொருட்களை காலப்போக்கில் மறந்து, கெமிக்கல் பொருட்களை வியாபார ரீதியாக மதிப்புக்கூட்டி கவர்ச்சியாக விளம்பரப்படுத்தியதால் மக்கள் தங்களது ஆரோக்கியத்தை பற்றி கவலை இல்லாமல் அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து மெடிக்கல் சந்தையில் தங்களை இணைத்துக் கொண்டது இன்றைய தலைமுறையினரின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
40 வருடத்திற்கு முன்பு மக்கள் ஓலை வீடு, ஓட்டு வீடு மற்றும் சுண்ணாம்பால் கட்டப்பட்ட வீடுகளில் குடியிருந்து வந்தார்கள், அன்று மக்கள் தோல் சம்பந்தமான நோய்கள் இல்லாமல் இருந்துள்ளார்கள். அன்று தோள்களில் ஏற்படும் அதிகபட்ச நோயாக சிறிய பூச்சிகள் எட்டுக்கால் பூச்சி இவைகளில் இருந்து வரும் அலர்ஜியால் தோள்களில் நோய் ஏற்படுவதுண்டு இதற்கு வீட்டில் அல்லது பாட்டி மருந்துகள் கொண்டு மருத்துவம் பார்த்து வந்தார்கள்.
இன்று, சிமெண்ட் கொண்டு கட்டப்படும் வீடுகளால் வெயில் காலத்தில் அதிக வெப்பம் தன்னுள் இழுத்துக் கொண்டு இரவு நேரங்களில் வெளியிடுகிறது. நகரப்புறங்களில் சிமெண்ட் வீடுகள் மிக நெருக்கமாக இருப்பதால் சூரிய வெப்பம் குடியிருப்புகளை இரவு நேரங்களில் அதிக வெப்பமாக வைத்துள்ளது. இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வசதியானவர்கள் குளிர்சாதன A/C பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் குளிர்சாதன A/C இயந்திரத்தில் இருந்து வரும் வெப்பத்தையும் சேர்த்து அதிகம் பாதிப்பை சந்திக்கிறார்கள்.
நாம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆமணக்கு எண்ணெய் இன்று விளக்கு எரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மனிதர்களை பலவீனப்படுத்த, விளக்கெண்ணெய் மாதிரி பேசுறான், இருக்கிறான், என்று விளக்கெண்ணெய் பற்றிய எதிர்மறை எண்ணங்களை மக்கள் மத்தியில் பரப்பி விளக்கெண்ணை கொடுக்கும் நன்மைகளை நம்மிடம் இருந்து அகற்றி விட்டார்கள்.
சமையலுக்கு பயன்படுத்தி வந்த நல்லெண்ணெய்க்கு பதிலாக பாமாயில் போன்ற சத்துகள் அற்ற வியாபாரப் பொருட்களை குறைந்த விலையில் மக்கள் மீது திணித்து மக்களை ஆராய்ச்சி உயிரினமாக மாற்றி விட்டார்கள் இன்றைய வியாபாரம் முதலாளிகள்.
இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் அதில் உள்ள சத்துக்களை உறிஞ்சி எடுத்துவிட்டு வியாபார மதிப்பு கூட்டாக விற்கப்படுகிறது. அதிலிருந்து எடுக்கப்படும் சத்துக்கள் மருத்துவத்துறையில் பயன்படுத்தி மக்களின் ஆரோக்கியத்திற்கு மருந்துகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். உணவே மருந்து என்ற நிலையில் இருந்து உணவை தனியாகவும் மருந்தை தனியாகவும் பிரித்து மக்களுக்கு வழங்குகிறார்கள்.
மக்கள் மீண்டும் தங்களது உணவை தாங்களே சமைத்து அதற்க்கு தேவையான மூலப் பொருட்களை தங்களை உற்பத்தி செய்யும் போது, வியாபார முதலாளிகளிடமிருந்து நாம் உடல் நலத்தை பாதுகாக்க முடியும்.
விளக்கெண்ணெயில் பயன்பாட்டை சரியாக மக்கள் பயன்படுத்தி வந்தால் இந்த கோடை காலத்தில் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் மக்களிடம் வராத அளவிற்கு பாதுகாப்பாக கடந்து செல்ல முடியும்.
இன்றைய மக்களின் வாழ்வாதாரம் வியாபார சந்தையாக மாறி உள்ளது. இதில் தங்களை நிலைநிறுத்தி தன்னிலை பெற்றவராக இந்த சமுதாயத்தில் அங்கீகாரம் பெற. தினமும் இந்த சந்தையில் தங்களது உழைப்பை விற்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆடம்பர தேவை இவர்களை தள்ளுகிறது.
பணத்தின் தேவை எதில் தன்னிறவு பெறும் என்பது மனிதர்கள் உழைப்புக்கு கொடுக்கும் அழுத்தத்தை பொறுத்து தீர்மானிக்கிறது.
உடலின் சக்தியை வைத்து மனிதர்களை இந்த வியாபார சந்தை பயன்படுத்திக் கொள்கிறது.
